"உலக கோப்பை தான் முக்கியம்.. குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாம் அடுத்தது தான்".. ரோஹித்துக்கு கவாஸ்கர் கொடுத்த அட்வைஸ்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மா குறித்து பேசியவை தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எப்போ சாகப்போறனு கேக்குற மாதிரி".. தோனியின் ஓய்வு குறித்து மனம் திறந்த முரளி விஜய்! EXCLUSIVE

கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இதனை இந்திய அணி பெற்று 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

ஒருநாள் தொடர்

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் வைத்து இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் கோப்பை யாருக்கு? என தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

கோப்பையை கைப்பற்றிய ஆஸி

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 270 ரன்களை நிர்ணயித்தது. இதனை சேசிங் செய்த இந்தியா 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் கோலி மட்டும் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

அட்வைஸ்

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மா குறித்து பேசியுள்ளார். அப்போது,"அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு போட்டியில் விளையாடிவிட்டு அடுத்த போட்டிகளில் விளையாடாமல் கேப்டன் இருக்க கூடாது. வேறு எந்த வீரரும் இப்படி செய்யலாம்.

Images are subject to © copyright to their respective owners.

அவருடைய குடும்ப நிகழ்ச்சிக்காக தான் சென்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உலகக்கோப்பை நெருங்கிவிட்ட நிலையில் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்க கூடாது. முன்பாகவே அதை செய்துகொள்ள திட்டமிடவேண்டும். ஆனால், அவசர சூழ்நிலை என்று வரும்போது அவர் சென்றுதான் ஆகவேண்டும். அதை ஏற்றுக்கொள்ளலாம்" என தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு பாண்ட்யா தலைமை தாங்கினார். தனது மனைவியின் சகோதரரது திருமணத்திற்காக ரோஹித் சென்ற நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இத இந்திய டீம் மறக்கவே கூடாது".. கோப்பையை பறிகொடுத்த இந்தியா.. கடுகடுத்த கவாஸ்கர்..!

CRICKET, KAVASKAR, SUNIL KAVASKAR, ROHIT SHARMA, WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்