'ஐ.பி.எல் போட்டிகள் வேணாம்'.. அதே 'எனர்ஜி'ய இங்க காட்டுங்க.... இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறும் 'கபில் தேவ்'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர் போட்டிகளால் அதிக நெருக்கடி ஏற்படுமெனில் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து முதலில் நடைபெற்ற டி 20 தொடரை 5 - 0 என வெற்றி பெற்றிருந்த நிலையில் ஒரு நாள் போட்டி தொடரை ௦ - 3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக இல்லாததால் தோல்வியடைந்தோம் என அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
ஐ.பி.எல் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்திய அணி வீரர்கள் அதிக நெருக்கடியுடன் தொடர்ச்சியாக ஆடி வரும் நிலையுள்ளதால் வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் ஒய்வு எடுத்துக் கொள்வது நல்லது. இந்திய வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடும் போது தங்களது முழு உத்வேகத்தையும் அளிக்கின்றனர். அதை விட சிறந்த ஆட்டத்தை தங்களது தேசிய அணிக்காக ஆடும் போதும் எந்த வித சமரசமும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்டி டீமை மாத்திட்டே இருந்தா’... ‘அப்புறம் எப்படி இருக்கும்’... ‘ஏன் அந்த வீரரை எடுக்கல’... ‘வறுத்தெடுத்த முன்னாள் கேப்டன்’!
- ‘81 பந்துகளுக்கு 11 ரன்கள் தானா?’... ‘இது ரொம்ப ஓவர் பாஸ்’... ‘பொறுமைய சோதிக்காதீங்க’... ‘இந்திய வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’!
- ‘இரண்டே ரன்னில் அவுட்’... 'திரும்பவும் மோசமான காலக் கட்டம்'... 'ரன் மெஷினுக்கு என்னாச்சு'... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'!
- 'எல்லா விதமான கிரிக்கெட்டிலும்'... 'இவர்தான் தலைச் சிறந்த வீரர்'... 'இந்திய வீரரை புகழ்ந்த நியூசிலாந்து கேப்டன்'!
- ‘டி20 உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வா?’... 'விராட் கோலி அதிரடி பதில்'!
- 'காயத்திலிருந்து மீண்ட வீரர்'... 'அப்பாடா ஒரு வழியா அவரு அணிக்கு திரும்பிட்டாரு'... 'நிம்மதி அடைந்த பிசிசிஐ'!
- 'நியூசிலாந்து தொடரில் சொதப்பல்'... 'மோசமான சாதனையால்'... 'தரவரிசையில் சறுக்கிய சீனியர் வீரர்'... 'முதலிடத்தை காப்பாற்றிக் கொண்ட கேப்டன்'!
- '3-வது முறையா கோப்பையை வெல்லணும்'... 'சைலண்ட்டாக வந்த புதிய ஃபீல்டிங் கோச்'... 'முன்னாள் விக்கெட் கீப்பர் நியமினம்'!
- 'ஒட்டுமொத்தமா சொதப்பிய வீரர்கள்'... 'தனி ஒருவனாக போராடிய வீரர்’... தெறிக்கவிட்ட நியூசிலாந்து!
- "விராட் கோலியா? ஸ்டீவ் ஸ்மித்தா? யாரு பெஸ்ட்..." "சச்சின் டெண்டுல்கர் என்ன சொன்னார் தெரியுமா?..."