அப்போ ‘உலகக்கோப்பை’ வின்னர்.. இப்போ நிலைமையே வேற.. முன்னாள் கிரிக்கெட் வீரரின் ‘பரிதாப’ நிலை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார்பென்டராக வேலை பார்த்து வரும் வீடியோ வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு சுழற்பந்து வீச்சாளரான சேவியர் டோஹெர்டி (Xavier Doherty) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். 5 ஆண்டுகள் அந்நாட்டுக்காக விளையாடிய அவர், 60 ஒருநாள், 4 டெஸ்ட் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் கடந்த 2015-ம் ஆண்டு ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் சேவியர் டோஹெர்டி இடம்பெற்றிருந்தார். உலகக்கோப்பை தொடருக்கு பின் அணியில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால், கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். தற்போது 38 வயதான சேவியர் டோஹெர்டி, கார்பென்டராக வேலை பார்த்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய சேவியர் டோஹெர்டி, ‘நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 12 மாதங்கள் எனக்கு வந்த வாய்ப்பையும் பயன்படுத்தி வேலை செய்து வந்தேன். இப்போது நான் கார்பென்டராக வேலை செய்து வருகிறேன். தற்போது எனது கையால் ஒரு வீட்டை வடிவமைத்து வருகிறேன். இது கிரிக்கெட்டை விட வித்தியாசமாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர் கார்பென்டராக வேலை பார்த்து வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்