கோலி இடத்துக்கு ‘இவரா’? ஐபிஎல் 2022-ல் ஆர்சிபி கேப்டன் ஆகப்போவது யார்?- முன்னாள் சுழற்பந்து வீச்சாளரின் ‘ஹின்ட்’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2022-ம் ஆண்டு ராயல் சேலஜர்ஸ் பெங்களுரூ (RCB) அணி கேப்டன் ஆக விராட் கோலிக்குப் பதிலாக ‘இவர்’ நியமிக்கப்படலாம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ப்ராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர். டேவிட் வார்னரின் அதிரடி ஆட்டத்தாலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது என அவருக்குப் பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

விரைவில் 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் தொடங்க உள்ள நிலையில் டேவிட் வார்னருக்கு பெரிய அதிர்ஷ்டம் இருப்பதாகவே கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி பெரும் ஏமாற்றத்தை அந்த அணிக்கு வார்னர் அளித்தார் என்பதை தற்போது மாற்றி அமைத்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் ‘தொடர் நாயகன்’ விருதையும் வார்னர் கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் ஐபில் 2022-ல் ஏலம் எடுக்கும் பல அணிகளின் கண்களிலும் வார்னர் பிரகாசமாகத் தெரிவார் எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆன ப்ராட் ஹாக்.

மேலும் ஹாக் கூறுகையில், “ஐபிஎல் 2022-ல் டேவிட் வார்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது. ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாகக் கூறிய நிலையில் அந்த அணியில் ஒரு நல்ல தலைமைக்கான தேவை உள்ளது. அந்த கேப்டன் பொறுப்புக்கு நிச்சயமாக வார்னரை விட வேறு என்ன நல்ல தேர்வு இருந்துவிட முடியும். வார்னர் அடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக விளையாட மாட்டார் என்றே நினைக்கிறேன். அந்த அணியின் நிர்வாகத்துக்கும் டேவிட் வார்னருக்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்றே நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஐபில் டைட்டிள் வின்னர் அளவுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தூக்கிச் சென்ற வார்னர் அந்த அணியில் விளையாடிய போதே 3 ஆரஞ்சு கேப்களுக்கு சொந்தமானார். 2021-ம் ஆண்டு ஐபிஎல் வார்னருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் இந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் மூலம் மீண்டும் வார்னர் தன்னை நிரூபித்துள்ளார் என்றே ரசிகர்கள் சமுக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

IPL, DAVID WARNER, RCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்