'நான் ஒரு நயா பைசா கூட சம்பாதிக்கலங்க...' 'சும்மா என்ன திட்டிட்டு இருக்காம உருப்படியா 'அதையாச்சும்' பண்ணுங்க...! - கடுப்பான முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் 2021ஆம் ஆண்டுக்கான ஐபில் போட்டி நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவும் விதமும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஐபில் கிரிக்கெட் தொடர் விளையாட வந்த வெளிநாட்டு வீரர்களும் சொந்த நாடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நோய் தொற்று பாதிப்பு அச்சம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகி ஆஸ்திரேலியா செல்லாமல் மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

ஏனென்றால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் நாட்டு அரசு தங்களுக்கு சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனோ, 'அது முடியவே முடியாது' எனக் கூறி இருந்தார். இதனால் கடுப்பான மைக்கேல் ஸ்லாட்டர் பிரதமரின் முடிவை ட்விட்டர் தளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரின் இந்த கருத்திற்கு ஆஸ்திரேலிய ட்விட்டர் பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, 'பணத்திற்கு ஆசைப்பட்டு உயிரை பணயம் வைத்து சென்றவர்கள் எல்லாம் இப்படி பேசக்கூடாது' என விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள மைக்கேல் ஸ்லாட்டர், 'நான் உயிர் வாழ்வதற்கு பணம் தேவை. பணத்திற்காக என நினைப்பவர்களுக்காக ஒன்று சொல்லி கொள்கிறேன். தொடக்கத்திலேயே ஐபிஎல் தொடரிலிருந்து விலகி விட்டதால் ஒரு பைசா கூட நான் சம்பாதிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை திட்டுவதை நிறுத்திவிட்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் உயிர்விட்டு கொண்டிருக்கும் மக்களை குறித்து சிந்தியுங்கள். அது தான் கரிசனம். அது எங்கள் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்!' என தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார் மைக்கேல் ஸ்லாட்டர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்