132 ஆண்டுகளுக்கு பின் நடந்த மிகவும் ‘அரிதான’ நிகழ்வு.. இந்தியா-நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 138 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் 132 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரிதான நிகழ்வு நிகழ்ந்துள்ளது. கடந்த 1889-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரில் 4 கேப்டன்கள் அணியை வழி நடத்தினர். அதேபோல் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் 4 கேப்டன்கள் அணியை வழி நடத்தி உள்ளனர்.

அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ரஹானேவும், நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சனும் வழி நடத்தினர். இதனை அடுத்து காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை விராட் கோலியும், நியூசிலாந்து அணியை டாம் லதாமும் வழி நடத்தி வைக்கின்றனர். இதன்மூலம் ஒரு தொடரில் 4 பேர் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்