‘அந்த தோல்வியை மறந்துடுங்க’.. இனிமேல் நம்ம பண்ண வேண்டியதெல்லாம் இதுதான்.. சோர்ந்துபோன இந்திய அணிக்கு ‘சூப்பர்’ அட்வைஸ் கொடுத்த முன்னாள் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் 16-வது லீக் போட்டி நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 57 ரன்களும், ரிஷப் பந்த் 39 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததால், பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்திய வீரர்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.

அதில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியை இந்திய வீரர்கள் முதலில் மறக்க வேண்டும். அதுகுறித்து இப்போது அதிகமாக சிந்திக்க வேண்டாம். இனிவரும் போட்டிகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே சிந்தனை இருக்க வேண்டும். இந்த தோல்வியை மறந்து அடுத்த போட்டிக்கு விரைவில் தயாராவீர்கள் என்ற நம்பிகை என்னிடம் உள்ளது. இது தொடரின் ஆரம்பம்தான் முடிவு இல்லை. அதனால் வெற்றிபெற வேண்டிய யுக்திகளை மட்டும் யோசியுங்கள்’ என சுனில் கவாஸ்கர் இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்