அவங்க இல்லான்னா என்ன.. 3 தரமான ப்ளேயர்ஸை குறைஞ்ச ரேட்டுக்கு எடுத்திருக்கோம்.. சிஎஸ்கே கோச் சொன்ன சூப்பர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிறந்த வீரர்களை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

முன்னதாக நடந்த ஐபிஎல் ஏலத்தில் சில புதிய வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. அதில் டேவோன் கான்வே, ஆடம் மில்னே ஆகிய வீரர்கள் புதிதாக சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர்கள், ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாட உள்ளனர் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

அதேவேளையில் சிஎஸ்கே அணியில் ஏற்கனவே விளையாடிய டு பிளசிஸ், ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்கள் வேறு அணிக்கு மாறியுள்ளனர். இதில் ஷர்துல் தாகூர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டு பிளசிஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவன் பிளெமிங் ஐபிஎல் ஏலம் குறிந்து பகிர்ந்துள்ளார். அதில், ‘ஏலத்தின் முடிவு எங்கள் திட்டத்தின்படி சென்றதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே சமயம் ஒரு சில தரமான வீரர்களை நாங்கள் தவறவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் அதற்கு ஈடாக சில திறமை வாய்ந்த தரமான வீரர்களை வாங்கியுள்ளோம். இந்த ஆண்டு அனுபவ மற்றும் இளம் வீரர்கள் நிறைந்த அணியாக எங்கள் அணி உள்ளது.

இந்த ஏலத்தில் சில வீரர்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளோம். அவர்கள் நிறைய அனுபவங்கள் கொண்ட திறமையான வீரர்கள். கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் டேவோன் கான்வே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் மிட்சேல் சான்ட்னர் எங்கள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர். ஆடம் மில்னே இருப்பதால் எங்களின் வேகப்பந்து சிறப்பாக மாறியுள்ளது. அதனால் நல்ல நுணுக்கங்களும், திறமையும் கொண்ட இந்த 3 வீரர்களும் எங்களிடம் உள்ளனர்’ என ஸ்டீவன் ப்ளெமிங் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்