கேப்டன் பொறுப்பை தோனி கொடுத்தபோது ‘கோலி’ சொன்ன அந்த வார்த்தை.. சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிய ‘கிங்’ கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தபோது விராட் கோலி கூறிய வார்த்தையை நிறைவேற்றியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை அடுத்து டெஸ்ட் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விராட் கோலி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அணிதான் டெஸ்ட் கிரிகெட்டில் ஆதிக்கம் செலுத்தும் என்றும், அதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் கடுமையாக உழைப்போம் என்றும் கூறினார்.

இதற்கு அடுத்த ஆண்டு ( 2016) ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் இடத்தை பிடித்தது. இதனை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 2017, 2018, 2019, 2020 என தொடர்ந்து முதலிடத்தை பிடித்தது. தற்போது வெளியாகியுள்ள 2021-ம் ஆண்டுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் இந்தியா முதலிடத்தை தக்கவைத்து, தொடர்ந்து 5 ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதன்மூலம் தான் கேப்டனாக பொறுப்பேற்கும்போது கூறிய வார்த்தையை விராட் கோலி மெய்யாக்கியுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் கோலியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது.

இதனை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த தொடரின் பாதியில் விராட் கோலி, பும்ரா, ஜடேஜா, முகமது ஷமி போன்ற முன்னணி வீர்ரகள் அடுத்தடுத்து விலகினர். இதனால் ரஹானே தலைமையில் இளம்வீரர்கள் படை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கோட்டை எனக் கருதப்படும் ஹப்பா மைதானத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு அந்த அணியை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள இந்த தொடரில், நியூஸிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்