"நம்ம எத்தன 'ரெக்கார்ட்' பண்ணாலும்... அத 'சொந்த' ஊருல பண்றது தனி 'கெத்து' தானே 'சார்'... மெர்சல் காட்டிய 'அஸ்வின்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் ஒரு நாள் மட்டும் மீதமுள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. இந்திய அணிக்கு கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது. இதனால், இந்த போட்டி டிராவில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது, அவர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்த நிலையில், 178 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, இங்கிலாந்து அணி வீரர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார்.

இத்துடன் டெஸ்ட் போட்டியில் 28 ஆவது முறையாக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். தனது, சொந்த ஊரான சென்னையின் சேப்பாக்கம் மைதானத்திலேயே இந்த சாதனையை அவர் செய்துள்ளார். தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் மிகச் சிறந்த வீரராக வலம் வரும் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 386 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக, இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அஸ்வின் விக்கெட் எடுத்திருந்தார். கடந்த 100 ஆண்டுகளில், டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்