145 வருஷ டெஸ்ட் வரலாற்றுல இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்ல.. பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது. மொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலும் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை என சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பாகிஸ்தான் தொடரை இழந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் நியமிக்கப்பட்டார். அதேபோல, கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்தும் ரமீஸ் ராஜா மாற்றப்பட்டு நஜாம் செதி புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி கடந்த 26 ஆம் தேதி கராச்சி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷபிக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர்.
ஆடுகளம் சுழல்பந்துக்கு சாதகமாக இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார் நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி. அது அந்த அணிக்கு கைகொடுத்தது. அஜாஸ் படேல் வீசிய ஓவரில் பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் ஸ்டம்பிங் மூலம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு, களத்திற்கு வந்த ஷான் மசூத் மைக்கேல் பிரேஸ்லெஸ் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டம்பிங் மூலம் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதாவது முதல் இரண்டு விக்கெட்களும் ஸ்டம்பிங் முறையில் எடுக்கப்பட்டன. மொத்த டெஸ்ட் வரலாற்றிலும் முதல் இரண்டு விக்கெட்டுகள் இப்படி ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். 145 வருட டெஸ்ட் வரலாற்றில் ஆடவர் போட்டிகளில் முதன்முறையாக இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஜமைக்காவில் கடந்த 1976 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | உயிருக்கு போராடும் மீம்ஸ் நாயகன் சீம்ஸ்.. உரிமையாளரின் உருக்கமான பதிவு.. கலங்கிப்போன நெட்டிசன்கள்..!
மற்ற செய்திகள்
உயிருக்கு போராடும் மீம்ஸ் நாயகன் சீம்ஸ்.. உரிமையாளரின் உருக்கமான பதிவு.. கலங்கிப்போன நெட்டிசன்கள்..!
தொடர்புடைய செய்திகள்
- இரட்டை சதம் அடிச்சுட்டு துள்ளி குதிச்ச வார்னர்.. அடுத்த செகண்ட் நடந்த விபரீதம்.. சோகத்தில் ரசிகர்கள்.. வீடியோ..!
- யாருமே எதிர்பார்க்கல.. ஷிகர் தவானுக்கு BCCI கொடுத்த ஷாக்.. சோகத்தில் ட்வீட் செய்யும் ரசிகர்கள்!
- பதவியை புடுங்கிட்டாங்க.. KL ராகுலுக்கு அதிர்ச்சி அளித்த BCCI.. இலங்கை தொடருக்கு புதிய துணைக் கேப்டன்!
- இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட்ல இடம்பெறாமல் போன நட்சத்திர வீரர்.. முழு விபரம்..!
- முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!
- வம்புக்கு வந்த ட்விட்டர்வாசியை பங்கமாக செஞ்சு விட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்.. "மனுஷன் சேட்ட புடிச்ச ஆளுங்க 😅"
- "ரவி அஸ்வினை இந்திய அணிக்கு கேப்டன் ஆக்கலாம்".. புள்ளி விவரத்தோடு BCCI-க்கு ஐடியா கொடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்!
- ஐபிஎல் 2023 : CSK கேப்டன் தோனியா? ஸ்டோக்ஸ்-ஆ?.. கிறிஸ் கெயில் சொன்ன அசத்தலான பதில்!!
- "இந்திய அணில யார் கூடவும் எனக்கு பிரச்சினை இல்ல".. மனம் திறந்து விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
- "ஏலத்துல என்னை மும்பை அணி எடுத்த 2 நிமிஷத்துல அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு".. சூரிய குமார் பற்றி மனம் திறந்த இளம் வீரர்..!