"ஆர்சிபி 'டீம்'க்கு மட்டும் தான் இப்டி எல்லாம் நடக்கும் போல..." பின்ச் செய்த மிரட்டல் 'சம்பவம்'... சரி, அதுக்கும் பெங்களூர் 'டீம்'க்கும் என்ன சம்பந்தம்??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி 20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி 2 - 1 என முன்னிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, நான்காவது டி 20 போட்டி, இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சிறப்பாக ரன்கள் குவித்தார். இறுதி வரை களத்தில் நின்ற அவர், 55 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அது மட்டுமில்லாமல், நியூசிலாந்து வீரர் ஜெமிசன் வீசிய கடைசி ஓவரில், 4 சிக்ஸர்களை பின்ச் விளாசினார்.

அதன் பிறகு, இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 19 ஆவது ஓவரில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற்றிருந்த நிலையில், ஆரோன் பின்ச்சை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. இதனால், அவரை ரசிகர்கள் அதிகம் விமர்சனம் செய்திருந்தனர். மேலும், அவரது மனைவிக்கு மிரட்டல்களையும் சிலர் விடுத்திருந்தனர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

ஆனால், தன் மீதான அத்தனை விமர்சனத்தையும் உடைக்கும் வகையிலான பேட்டிங்கை பின்ச் இன்று செய்துள்ளார். அது மட்டுமில்லாமல், கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியில் இருந்த பின்ச்சை, அந்த அணி ஏலத்திற்கு முன்பாக விடுத்திருந்தது. தற்போது நடந்து முடிந்த ஏலத்தில், நியூசிலாந்து வீரர் கைலி ஜெமிசனை 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், இன்று பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்த வீரரின் ஓவரில், பின்ச் 4 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இதனால், நெட்டிசன்கள் பலர், பெங்களூர் அணியைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
 













 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்