காயம் சரியானதும் பவுலிங் போட வந்த பும்ரா.. அப்போ கோலி சொன்ன வார்த்தை.. அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பும்ரா மீண்டும் பவுலிங் செய்ய வந்ததை விராட் கோலி பெருமையாகக் கூறிய வார்த்தை ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.

காயம் சரியானதும் பவுலிங் போட வந்த பும்ரா.. அப்போ கோலி சொன்ன வார்த்தை.. அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ..!
Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Finally the Rock has come back, Kohli said Bumrah returned to bowl

இதனை அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களை இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக பவுலிங் செய்தபோது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக அவர் பெவிலியன் திரும்பினார். இதனால் நீண்ட நேரமாக அவர் பவுலிங் வீச வரவில்லை.

இதனை அடுத்து வந்த பும்ராவை வரவேற்கும் விதமாக, ‘ஒரு வழியாக தி ராக் வந்துவிட்டார்’ என விராட் கோலி கூறினார். WWE குத்துச்சண்டை வீரர் ராக்கை குறிப்பிட்டு பும்ராவை விராட் கோலி புகழ்ந்து பேசியது ஸ்டம் மைக்கில் அப்படியே பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

VIRATKOHLI, INDVSA, BUMRAH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்