'எம் புள்ளய பாக்காம தூங்க முடியல!'.. மூணாறு நிலச்சரிவில் பலியான மகன்கள்.. 40 நாட்களாக தினமும் 'தந்தை செய்யும்' நெஞ்சை உருக்கும் செயல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேரள மாநிலம் மூணாறில் உண்டான நிலச்சரிவில் 70 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புக்குழுவினர் இதுவரை 66 பேரின் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது.
பல நவீன உபகரணங்களை பயன்படுத்தி தேடிய போதிலும் இன்னும் 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட முடியாத சூழலில் உள்ளது. மூணாறு நிலச்சரிவில் பலியான தனது இளைய மகன் நிதிஷ் குமாரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மூத்த மகன் தினேஷ் குமார் இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது தந்தை சண்முகநாதன் தினமும் காலையில் நிலச்சரிவு நடந்த இடத்திற்குச் சென்று மாலை வரை தன் மகனின் உடல் கிடைக்குமா எனத் தேடி வருகிறார்.
கடந்த 40 நாட்களுக்கு மேலாக இப்படித்தான் தினமும் அவர் தேடி வருகிறார். ஜனவரி 2021 வரை தனது மகனை இப்படி தேட உள்ளதாகவும், தனது மகனை இழந்து 41 ஆவது நாளில், கடைபிடிக்கப்படும் வழக்கமான சடங்குகள் எதையும் தான் கடைப்பிடிக்கவில்லை என கூறும் சண்முக நாதன், தன் மகனின் உடலை மீட்டு எடுக்காமல் எப்படி அதை செய்ய முடியும் என்றும் அவனது உடலை மீட்காமல் தன்னால் தூங்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள கிராம வங்கியில் காசாளராக இருக்கும் சண்முகநாதனின் மகன்களான தினேஷ்குமார், நிதீஷ் குமார் ஆகியோர் சண்முகநாதனின் சகோதரர் அனந்தா சிவாமின் பேத்தியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் வசித்தனர். அப்போதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தினேஷ்குமார் இந்த ஆண்டுதான் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பதும், நிதிஷ்குமார் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் என்பதும், கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி நிதிஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பேசிய சண்முகநாதன் நிலச்சரிவில் மொத்தம் 22 குடும்ப உறுப்பினர்கள் தான் இழந்ததாகவும், இதில் தங்கள் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்னும் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தினேஷ் குமாரைத் தவிர கஸ்தூரி, பிரியதர்ஷினி ஆகியோரின் சடலங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இறந்தவர்களின் உடலை தேடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்தும் உடல்களை மீட்க முடியவில்லை என தேவிகுளம் துணை கலெக்டர் எஸ்.பிரேம்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கட்டிடப் பணி, ஹோட்டல், ஜவுளிக்கடைகளில் வேலை’.. அப்பாவிகள் போல் நடமாடிய நபர்கள்.. பாதாள அறையைக் கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள்!
- 'என் பெயரை கேட்டாலே...' 'எதிர்ல நிக்றவங்க கண்ணுல மரண பயம் தெரியுது...' 'அப்படி என்ன பெயர் வச்சுருக்காங்க...' - இப்படியுமா ஒரு இளம்பெண்ணிற்கு சோதனை வரும்...!
- 'காதலனிடமும், காதலனின் தாயிடமும் போனில் கெஞ்சிய இளம் பெண் வழக்கில் புதிய தகவல்!'.. டிக்டாக் தோழியான சீரியல் நடிகை தலைமறைவு?
- 'வெளிநாட்டில் இருந்து வந்த கணவர்!'.. ஆசை ஆசையாக சாப்பாடு கொடுத்துவிட்டு மனைவி கொடுத்த ஷாக்!
- 'எனக்கு அம்மாவ பாக்கணும்'... 'ஏங்கிப்போன பிஞ்சு மனசு'...'ஒர்க் பிரஷரால் தம்பதி எடுத்த முடிவு'... 19 மாத பாச போராட்டம்!
- VIDEO: 'வாவ்...! என்ன ஒரு confidence...' 'சந்து கேப்ல சட்டுன்னு வண்டிய திருப்பிட்டாரு...' - கணவனின் திறமையை வீடியோ எடுத்த மனைவி...!
- 'அவர் என்னை கர்ப்பமாக்கியது உங்களுக்கு தெரியும்.. உங்க மருமகளா வரணும்னுதான் விரும்புறேன்!'.. தற்கொலைக்கு முன் காதலனிடமும், காதலன் தாயாரிடமும் போனில் கெஞ்சிய இளம்பெண்.. உருகவைத்த ஆடியோ.. கலங்கவைத்த சம்பவம்!
- "வீட்டுக்கு வா.. கொரோனா நெகடிவ்னு ரிப்போர்ட் தர்றேன்!".. சுகாதார ஆய்வாளரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- 'ஸ்பீக்கர்.. செல்லோ டேப்னு தானேனு நெனைச்சா'.. ஏர்போர்ட்டில் உறையவைத்த 'ஜகஜால' கில்லாடிகள்.. கைவிலங்கு போட்டு கூட்டிச் சென்ற போலீஸ்!
- VIDEO: 'கேரளா பேமஸ் சாய் ஸ்வேதா டீச்சர்...' 'நோ..., நான் படம்லாம் நடிக்க மாட்டேன்...' வாய்ப்பை மறுத்ததால் வக்கீல் செய்த காரியம்...!