IPL 2022: இந்த சீசனில் ரசிகர்கள் மிஸ் செய்யப்போகும் 5 விஷயங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2022 சீசன் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியோடு தொடங்குகிறது.

Advertising
>
Advertising

"கொஞ்ச நேரத்துல போர் முடிவுக்கு வந்துடும்".. தகவல் அனுப்பிய ரஷ்ய ராணுவ ஜெனரல்.. ஆனா நடந்ததே வேற..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் முழுக்க நடக்கவில்லை. கடந்த ஆண்டு பாதி தொடர் இந்தியாவிலும் மீதி ஐக்கிய அரபுகள் அமீரகத்திலும் நடந்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழு தொடரும் இந்தியாவில் நடப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த மகிழ்ச்சிகளுக்கு இடையிலும் ரசிகர்கள் இந்த தொடரில் சில விஷயங்களை மிஸ் செய்ய போகிறார்கள். அவற்றை பற்றிய ஒரு பார்வை.

தோனியின் கேப்டன்சி விலகல்…

இதுவரையிலான ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது.  அதற்கு அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒரு காரணமாக இருந்து வந்தார். அந்த அணி விளையாடிய 12 சீசன்களிலும் அவரே கேப்டனாக செயல்பட்டார். இதுவரை 4 முறை கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றியுள்ளது. தற்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் அணிக்குள் ஒரு வீரராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. சி எஸ் கே அணிக்கு கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியை விட்டு விலகியுள்ளதால் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமோ என்ற சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சிஎஸ்கே CEO அதை மறுத்து தோனி தொடர்ந்து விளையாடுவார் என்று கூறியுள்ளார்.

கோலியின் கேப்டன்சி விலகல்…

கடந்த ஆண்டே விராட் கோலி இந்த முடிவை அறிவித்துவிட்டார். 2014 ஆம் ஆண்டு ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி. பல முறை ப்ளே ஆஃப்க்கு சென்ற போதும், சில முறை பைனலுக்கே சென்ற போதும் இன்னும் கோப்பையை வெல்ல முடியவில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் கடைசி வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து ஆர் சி பி அவரை 15 கோடிக்கு தக்கவைத்தது.

டிவில்லியர்ஸ் ஓய்வு…

சர்வதேச போட்டிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வை அறிவித்துவிட்ட மிஸ்டர் 360 என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில்  டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு முதல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆர் சி பி அணியின் தூண்களில் ஒருவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த டிவில்லியர்ஸ் இல்லாமல் இந்த ஆண்டு அந்த அணி விளையாட உள்ளது. தற்போது ஆர் சி பி அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யூனிவர்ஸல் பாஸ் கெய்ல்…

டி 20 கிரிக்கெட்டின் சாதனையாளர்களில் ஒருவரும் யூனிவர்ஸல் பாஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான கிறிஸ் கெய்ல் ஐபிஎல் கிரிக்கெட்டின் மிக முக்கியமான எண்டர்டெயினர்களில் ஒருவர். கொல்கத்தா, ஆர் சி பி மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய இவர் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு மிக அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது.

சுரேஷ் ரெய்னா இல்லாத ஐபிஎல்…

மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் அளவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர். சி எஸ் கேவில் தோனி தல என்றால் ரெய்னாதான் தளபதி என்று ரசிகர்கள் கொண்டாடிய வீரர். 11 சீசன்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வந்த சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் இவரை சி எஸ் கே உள்ளிட்ட எந்த ஒரு அணியும் எடுக்கவில்லை. இதனால் இப்போது ஐபிஎல் 2022 சீசனில் இந்தி வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார். ரெய்னா இல்லாத முதல் ஐபிஎல் தொடராக அமையப்போகிறது.

புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய பத்திரிக்கையாளர்.. காலைல வீட்டு வாசல்ல காத்திருந்த அதிர்ச்சி..!

CRICKET, IPL, IPL2022, MS DHONI, VIRAT KOHLI, SURESH RAINA, AB DE VILLIERS, CHRIS GAYLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்