"இவரு விளையாடலனா, அவரு என்னங்க பண்ணுவாரு... இதெல்லாம் ரொம்ப ஓவர்...!" - 'இளம் வீரரை வச்சு செஞ்ச ரசிகர்கள்... கூடவே, தோனியையும் இழுத்து விட்டது தான் கொஞ்சம்...??!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஜெய்ஷ்வால் சரியாக ஆடாததால் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

நேற்று டெல்லிக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்ற நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டிற்கு 184 ரன்கள் எடுத்தது. எளிதாக 200 ரன்கள் அடிக்க வேண்டிய மைதானத்தில் டெல்லி அணி தேவையில்லாத விக்கெட்டுகளை இழந்த காரணத்தால் 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களுக்கு அவுட் ஆக, சஞ்சு சாம்சன் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வரிசையாக வீரர்கள் விக்கெட்டுகளை இழக்க, ஒரு பக்கம் ஜெய்ஷ்வால் பொறுமையாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.

தொடக்கத்தில் 20 பந்துகளை பிடித்த அவர் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒவ்வொரு பந்திலும் சிங்கிள் அடித்து மிகவும் பொறுமையாக விளையாடியதால் ராஜஸ்தான் அணிக்கு தேவையான ரன் ரேட் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதன்பிறகு ஜெய்ஷ்வால் 36 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர் இரண்டு 2 சிக்ஸ் அடித்தபோதும் மற்ற பந்துகளில் எந்த ஷாட்டும் அடிக்காமல் மிக மோசமாக ஆடினார். இவருடைய ஆட்டம் காரணமாக எதிரில் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகரிக்க, இதுவும் கூட ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

ஜெய்ஷ்வால் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத நிலையில், நேற்றைய  போட்டியிலும் சொதப்ப, இவருடைய பேட்டிங்கை பலரும் தோனி மற்றும் ஜாதவின் பேட்டிங் உடன் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். உங்கள் பேட்டிங் தோனி ஆடுவது போல மெதுவாக இருக்கிறது எனவும், இவர் ஏன் முக்கியமான கட்டத்தில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார் எனவும் பலர் கிண்டல் செய்ய, தோனியை பார்த்து ஜெய்ஷ்வால் கும்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

நேற்று தான் அவுட் ஆன பின் மிகவும் கோபமாக பெவிலியன் சென்ற ஜெய்ஷ்வால் டிரெஸ்ஸிங் ரூமில் கோபமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக சிஎஸ்கே வீரர்கள் சொதப்பினால் தோனியை கிண்டல் செய்துவந்த நிலையில், தற்போது ஒரு புகைப்படத்தை வைத்து மற்ற அணி வீரர்களுடனும் சேர்த்து அவரை கிண்டல் செய்துள்ளனர். இதற்கிடையே ஒரு இளம்வீரரை இவ்வளவு மோசமாக கிண்டல் செய்வது மிகவும் தவறு என ஜெய்ஷ்வாலுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்