‘ஒரே ஒரு ரன்ல மிஸ் ஆகிடுச்சே’!.. ‘கடைசி பந்துல நீங்க அதை பண்ணிருக்கலாமே?’.. ரிஷப் பந்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்காக டெல்லி கேப்டன் ரிஷப் பந்தை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி (12 ரன்கள்) மற்றும் தேவ்தத் படிக்கல் (17 ரன்கள்) அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரஜத் பட்டிதர் மற்றும் மேக்ஸ்வெல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் மேக்ஸ்வெல் 25 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 75 ரன்களும் (5 சிக்சர், 3 பவுண்டரி), ரஜத் பண்டிதர் 31 ரன்களும் (2 சிக்சர்) எடுத்தனர். டெல்லி அணியைப் பொறுத்தவரை இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்சர் படேல், ரபாடா மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரீத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் தவான் 6 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த், ப்ரீத்வி ஷாவுடன் கூட்டணி அமைத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சமயத்தில் ஹர்சல் படேல் வீசிய ஓவரில் ப்ரீத்வி ஷா 21 ரன்களில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸும் 22 ரன்களில் அவுட்டாகினார். இதனால் 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது. இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய ஹெட்மெயர், 25 பந்துகளில் 53 ரன்கள் (4 சிக்சர், 2 பவுண்டரி) அடித்து அதிரடி காட்டினார். ஆனால் மறுமுனையில் இருந்த ரிஷப் பந்த் சிங்கிள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தார்.

 

Rishabh Pant ♥️
We love you Spidey 💙
Chin up @RishabhPant17 pic.twitter.com/2nLGUJ6qyx
— Asha (@ashaa_45) April 27, 2021

டெல்லி அணியின் தோல்விக்கு கேப்டன் ரிஷப் பந்தும் ஒரு காரணம் என ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போட்டியை ரிஷப் பந்த் டெஸ்ட் மேட்ச் போல (48 பந்துகளில் 58 ரன்கள்) விளையாடினார் என்றும், கடைசி பந்தில் ஹெட்மெயருக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்