பிசிசிஐ போட்ட ஒரே ஒரு ட்வீட்.. மின்னல் வேகத்தில் டிரெண்டாகும் கௌதம் கம்பீர்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரை திடீரென இணையத்தில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று (08.09.2021) அறிவித்துள்ளது. இதில் நீண்ட நாட்களாக இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இடம்பெறாமல் இருந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். அதேபோல் மற்றொரு தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியும் இடம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இனிமேல் இந்திய அணிக்காக தோனி விளையாடமாட்டார் என வருந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்ட உடனே, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். தோனியை ஆலோசகராக நியமித்தது கம்பீருக்குதான் சோகமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் குறும்பாக பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பையை இந்தியா வென்றது. அப்போட்டியில் கம்பீர் 97 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. அதனால் அடிக்கடி தோனிக்கு எதிராக கம்பீர் கருத்து தெரிவித்து வந்தார்.

அதனால் தற்போது கம்பீரின் மனநிலை எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி 91 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்