நீங்க சொன்னது ஒன்னு.. ஆனா அங்க நடந்தது ஒன்னு.. கம்பீரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்ததை அடுத்து கௌதம் கம்பீரை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 22 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 41 ரன்களும் எடுத்தனர். மேலும் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை (Gautam Gambhir) ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers), இப்போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரராக இருக்கப் போகிறார் என கணித்தார்.

ஆனால் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் (Andre Russell) வீசிய ஓவரில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டாகி ஏபி டிவில்லியர்ஸ் வெளியேறினார். அதனால் கம்பீரின் கணிப்பை ரசிகர்கள் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்