‘தீபாவளிக்கு வாழ்த்து சொன்ன ஹிட் மேன்’.. ‘ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன ரோஹித் ஷர்மாவை நெட்டிசன்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை தொடரிலும், அதன்பிறகான போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரிலும் அதிரடியாக விளையாடிய அவர் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் ரோஹித் ஷர்மா நேற்று ட்விட்டரில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி இன்னும் அதிக ஒளியை நம் அனைவருடைய வாழ்க்கையிலும் கொண்டு வரட்டும். தீபங்கள் ஏற்றி இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம். எந்தவொரு பட்டாசையும் வெடிப்பதற்கு முன் இதுபோன்ற மற்ற உயிர்களையும் மனதில் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். இவ்வளவு இவை பயப்படுவதைப் பார்ப்பது மிகவும் கொடுமையானது” எனக் கூறி பட்டாசு சத்தத்தைக் கேட்டு நாய்க்குட்டிகள் பயப்படும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். நீங்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஜெயிக்கும்போதும், மற்ற விழாக்களிலும் பட்டாசு வெடிப்பதே இல்லையா என பலரும் அவரை சாடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘65 வருஷம் ஆச்சு’ ‘தீபாவளி கொண்டாடுனதே இல்லை’.. ‘ஆச்சரியப்பட வைத்த 13 கிராமம்’.. காரணம் என்ன தெரியுமா..?
- ‘தீபாவளியை முன்னிட்டு’.. ‘இலவச அன்லிமிடட் ஆஃபரை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்’..
- 'எங்க வேணா ரசிகர் மன்றம் வெப்பேன்.. முடிஞ்சத பாத்துக்க' .. 'போதையில் போலீஸைத் திட்டி வீடியோ'.. ரசிகர்கள் கைது!
- ‘ஒரு ரூபாய், 10 ரூபாய் கொடுத்தா போதும்’... 'தீபாவளிக்கு அதிரடி ஆஃபர்'... ‘சென்னையில் குவியும் மக்கள் கூட்டம்’!
- ‘நொடிப்பொழுதில் ஆட்டோவும், லாரியும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘மதுரையில் 6 பேர் பலியான பயங்கரம்’..
- 'பிகில்' சிறப்பு காட்சி: 'ஆர்வக் கோளாறால்' இப்படியெல்லாம் பண்றாங்க... அமைச்சர் கடம்பூர் ராஜு!
- ‘தீபாவளியன்று’.. ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. எந்தெந்த ஊர்காரங்க எங்கிருந்த பஸ் ஏறணும்..? விவரம் உள்ளே..!
- ‘தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு’.. முன்பதிவு எப்போ..? விவரம் உள்ளே..!
- ‘இதுக்கெல்லாம் அஞ்சக்கூடாது’... ‘பிகில்’ ஸ்பெஷல் ஷோ சர்ச்சை... சீமான் பதில்!