என்னதாங்க ஆச்சு இவருக்கு?.. மறுபடியும் சொதப்பிய லக்னோ வீரர்.. விட்டும் விளாசும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணி வீரர் மனிஷ் பாண்டேவை நெட்டிசன்கள் இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி இன்று (04.04.2022) மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்களும், தீபக் ஹூடா 51 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னா அணி வீரர் மனிஷ் பாண்டேவை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த போட்டியில் 10 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

முன்னதாக நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்னிலும், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்னிலும் மனிஷ் பாண்டே அவுட்டானார். தொடர்ந்து சொதப்பி வருவதால் இவருக்கு பதிலாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

IPL, SRH, SRHVLSG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்