CSK vs RCB: ‘என்னதாங்க ஆச்சு இவருக்கு..?’ மறுபடியும் சொதப்பிய ருதுராஜ்.. இந்த தடவை எத்தனை ரன்ல அவுட் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சொதப்பிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி இன்று (12.04.2022) மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது.

இதில் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர். அதில் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோஸ் ஹசில்வுட் வீசிய ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் இவர் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். அதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 0,1,1,16 என சொற்ப ரன்களிலேயே ருதுராஜ் ஆட்டமிழந்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை வாங்கிய இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக சொதப்பி வருவது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்கள் பலரும் ருதுராஜ் கெய்க்வாட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

CSK, RCB, IPL, CSKVRCB, RUTURAJ GAIKWAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்