"ஒரே ஒரு 'வீடியோ' தான் 'upload' பண்ணாரு..." கோலியை மொத்தமா வெச்சு செஞ்ச 'ரசிகர்'கள்,,. நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் மக்கள் அனைவரும் இன்று தீபாவளி திருநாளை கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

தனது வாழ்த்துக்களுடன் கோரிக்கை ஒன்றையும் மக்களுக்கு விராட் கோலி முன் வைத்துள்ளார். அந்த வீடியோவில், 'உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தீபாவளி என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது பலகாரமும், பட்டாசும் தான். ஆனால் இந்த முறை தீபாவளி தினத்தன்று நாம் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்பதை மனதில் கொள்ளுங்கள். பட்டாசு வெடிக்காமல் சுற்றுச்சூழலை நாம் பாதுகாத்து, விளக்கேற்றி, இனிப்புகளை வழங்கி இந்த தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்' என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். 

 

விராட் கோலி சொன்ன இந்த கருத்தால் ரசிகர்கள் அவரை அதிகம் விமர்சனம் செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் வாண வேடிக்கைகளை மற்றும் பட்டாசுகள் வெடித்ததை குறிப்பிட்ட ரசிகர்கள், ஒரு நாளில் மட்டும் சுற்றுச்சூழலை பாதுகாத்தால் போதுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விராட் கோலியின் வீடியோ தொடர்பான ரசிகர்களின் கருத்து தற்போது அதிகம் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. 

















 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்