‘இவரையா வெளியே உட்காரவச்சீங்க’!.. டி20 உலகக்கோப்பையில் என்ன ‘விருது’ வாங்கியிருக்காரு பாருங்க.. SRH அணியை வச்சு செய்யும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்றதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

துபாய் மைதானத்தில் நேற்று டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஆடம் ஜாம்பா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா முதல்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 77 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு காரணம், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கேப்டனாக டேவிட் வார்னர் (David Warner) வழி நடத்தினார். இந்தியாவில் நடைபெற்ற தொடரின் முதல் பாதியில் ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.

இதனால் திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டார். இதனை அடுத்து கேன் வில்லியம்சனை ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக, அந்த அணி நிர்வாகம் நியமித்தது. மேலும் வார்னரின் பேட்டிங் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் ப்ளேயிங் லெவனிலும் அவரின் பெயர் இடம்பெறவில்லை. அப்போது சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து கொடுத்த வார்னரின் வீடியோ வெளியாகி ரசிகர்களை சோகமடைய வைத்தது.

இந்த நிலையில் தற்போது நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வார்னர் வெளிப்படுத்தினார். இந்த தொடரில் மொத்தமாக 289 ரன்களை அடித்து அசத்தினார். அதனால் அவருக்கு டி20 உலகக்கோப்பை தொடரின் ‘தொடர் நாயகன்’ (Player Of the Series) விருது வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடவில்லை என வெளியே உட்கார வைக்கப்பட்ட வார்னர், தற்போது தொடர் நாயகன் விருது வாங்கியதை குறிப்பிட்டு ஹைதராபாத் அணியை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

DAVIDWARNER, SRH, NZVAUS, AUSVNZ, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்