வச்ச நம்பிக்கை எல்லாம் வீணா போச்சு.. டிரெண்டாகும் ‘புது’ வார்த்தை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா மற்றும் ரஹானேவை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

வச்ச நம்பிக்கை எல்லாம் வீணா போச்சு.. டிரெண்டாகும் ‘புது’ வார்த்தை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Fans slam Pujara, Rahane for repeated failures with bat

இது அதிகபட்சமாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும், மார்க்கோ ஜான்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக சொதப்பியது. குறிப்பாக புஜாரா 3 ரன்களிலும், ரஹானே தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தும் வெளியேறினர். அதனால் வலுவான ஒரு கூட்டணி அமைக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது. இதன்காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முன்னதாக நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரஹானே மற்றும் புஜாரா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் அப்போது அவர்கள் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் வெளிநாட்டு மைதானங்களில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர். அதன்படி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருவருக்கும் இடம் கிடைத்தது.

ஆனால் இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் சொற்ப ரன்களில் இருவரும் அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் ரஹானே மற்றும் புஜாரா ஓய்வு பெறவேண்டும் என்று தேங்க்யூ புரானே (Thank you Purane) என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

PUJARA, RAHANE, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்