‘ஒரு சீனியர் ப்ளேயர் கிட்ட இப்படி நடந்துப்பீங்க’.. ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமியை குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கோபமாக திட்டிய வீடியோ பெரிய வைரலாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

CSK vs RCB: 8 வருடத்துக்குப் பிறகு மிஸ் ஆகும் விஷயம்… ரசிகர்கள் சோகம்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 21-வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களை எடுத்தார்

இதனை அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஆரம்பமே அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அதில் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 42 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 46 பந்துகளில் 57 ரன்களையும் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 129 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பலமான நிலையில் இருந்தது.

இதன் பின்னர் வந்த நிக்கோலஸ் பூரனும் அதிரடி காட்டினார். 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 34 ரன்களை விளாசினார். இதனால் 19.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்து ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் பெறும் முதல் தோல்வி இதுதான்.

இந்த நிலையில், இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா வீசிய 13-வது ஓவரில் கேன் வில்லியம்சன் 2 சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி அடித்த பந்து ஒன்று எட்ஜ் ஆகி மேலே பறந்தது. அப்போது டீப் பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் முகமது ஷமி பீல்டிங் செய்து கொண்டு இருந்தார். இவர் கொஞ்சம் முயற்சி செய்து டைவ் அடித்து இருந்தால் அந்த கேட்சை பிடித்து இருக்கலாம். ஆனால் பந்து விழுந்த பின்தான் ஷார்ட் தேர்ட் மேன் திசையை நோக்கி முகமது ஷமி ஓடி வந்தார்.

இதை பார்த்து கடுப்பான ஹர்திக் பாண்ட்யா வெளிப்படையாக முகமது ஷமியை களத்திலேயே திட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீனியர் வீரரான ஷமியை ஹர்திக் பாண்ட்யா கோபத்துடன் திட்டியதை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

தொடர் கொள்ளை.. ஆனா எல்லாத்துலயும் ஒரே பார்முலா.. போலீஸ் போட்ட வலையில் சிக்கிய பலே திருடன்..!

 

CRICKET, IPL, HARDIK PANDYA, MOHAMMED SHAMI, GT VS SRH, IPL 2022, GT CAPTAIN HARDIK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்