'இப்போ இதெல்லாம் தேவையா???'... 'வாழ்த்து சொல்லி கோலியை சீண்டிய இங்கிலாந்து'... 'கொந்தளித்துபோன ரசிகர்கள் கொடுத்த பதிலடி!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விதம் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களால் கிங் என அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தன் 32வது பிறந்த நாளைக் கொண்டாடினார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அவருக்கு பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது.

ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வாழ்த்து பதிவு விராட் கோலியை பாராட்டும் விதமாக இல்லாமல் அவரைக் கிண்டல் செய்யும் விதமாக இருந்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் தொடரின் முன்றாவது ஆட்டத்தில் 71 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் கான் பந்துவீச்சில் கோலி கிளீன் போல்ட் ஆகியிருப்பார்.  

அந்த வீடியோவையே வாழ்த்து பதிவில் பகிர்ந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதில், "இந்த நூற்றாண்டின் சிறந்த பந்தை கோலிக்கு வீசி போல்ட் செய்துள்ளார் ரஷீத்" என்ற கேப்ஷனோடு அதற்கு கீழே ஹேப்பி பர்த் டே விராட் கோலி எனக் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இந்த நிலையில் இதெல்லாம் தேவை தானா எனவும், கோலியின் தனித்திறனுக்கு மரியாதை கொடுங்கள் எனவும் கமெண்ட் செய்துள்ளனர். மற்றொரு ரசிகர், பிராட் பிறந்த நாளுக்கு மறக்காமல் யுவராஜ் அடித்த ஆறு சிக்ஸர் வீடியோவை பகிருங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்