World Cup : இத நெனச்சாலே மனசு கலங்கும்.. நெருங்கும் Semi Finals.. எமோஷனல் தருணங்களை Rewind செய்யும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

8 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "பிரகதீஸ்வரர் ஆலயம் கட்ட முடியாம போகலாம்... ஆனா கக்கூஸ் கட்டினாலே..." - கமல் பேசியது என்ன?

சூப்பர் 12 சுற்று முடிவுகளுக்கு பிறகு தற்போது நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதன் முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், நாளை (09.11.2022) சிட்னி மைதானத்தில் மோத உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள், நாளை மறுநாள் (10.11.2022) அடிலெய்ட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதனிடையே, சமீபத்திய உலக கோப்பை தொடர்களின் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் கடைசி நிமிட திருப்புமுனை நிகழ்ந்து ரசிகர்களை மனம் நொறுங்க வைத்த சில நிகழ்வுகளை பார்க்கலாம்.

முடிவை மாற்றிய DLS?

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐம்பது ஓவர் உலக கோப்பை போட்டியின் முதல் அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி இருந்தது.

டக்வொர்த் லீவிஸ் முறை படி, நியூசிலாந்து அணி 43 ஓவரில் 299 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்த பட்சத்தில் ஒரு பந்து மீதம் வைத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. நல்ல ஒரு வாய்ப்பு நழுவி போனதால், ஏபி டிவில்லியர்ஸ், மோர்னே மோர்கல், பாப் டு பிளெஸ்ஸிஸ் உள்ளிட்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். இன்று நினைத்தாலும் பல கிரிக்கெட் ரசிகர்களை மனம் உடைய வைக்கும் சம்பவம் இது.

"நாலே சிக்ஸர் தான்"..

இதே போல, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் மோதி இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டிருந்தது.

இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் நான்கு பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி போட்டியை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திருப்பி இருந்தார் கார்லோஸ் பிராத்வெய்ட். கையில் இருந்த வெற்றி வாய்ப்பு நான்கே பந்துகளில் தலைகீழாக மாறியதால் இங்கிலாந்து வீரர்கள் நொந்து தான் போயினர்.

மறக்க முடியாத ரன் அவுட்..

இதற்கு அடுத்தபடியாக, 2019 ஆம் ஆண்டு நடந்த அரை இறுதி போட்டியை எந்த காலத்திலும் இந்திய ரசிகர்களால் மறந்து விட முடியாது. நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதி இருந்த போட்டியில், 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி இருந்தது இந்திய அணி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து இந்திய அணி தடுமாற, ஜடேஜா அதிரடியாக ஆடி ரன் சேர்த்திருந்தார். கடைசி கட்டத்தில் 10 பந்துகளில் 25 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது.

களத்தில் தோனி இருக்க, பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். ஆனால், கிரீஸுக்கு அருகே வரும் போது கப்தில் வீசிய பந்து நேராக ஸ்டம்பை பதம் பார்த்து ரன் அவுட்டும் ஆகி இருந்தது. பின்னர் இந்த போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்த நிலையில், ஒரு வேளை தோனி அவுட்டாகாமால் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என இன்று வரை புலம்பாத ரசிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தோனி ரன் அவுட்டாகும் வீடியோவை இப்போது பார்த்தாலும் ரசிகர்கள் கலங்குவார்கள்.

சூப்பர் ஓவரும் டிரா..

அதே 2019 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி இருந்த போட்டி, டிரா ஆனது. இதன் பின்னர் நடந்த சூப்பர் ஓவரும் டிரா ஆக கடைசியில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணி உலக கோப்பையை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஒவ்வொரு பந்தும் கடைசி கட்டத்தில் பதற்றமாகவே இருக்க, டிரா ஆனதன் பெயரில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணி வென்றதால் நியூசிலாந்து வீரர்கள் மனம் கலங்கினர்.

வாய்ப்பை தவற விட்ட பாகிஸ்தான்

இதனையடுத்து, 2021 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பையின் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட, 19 ஆவது ஓவரிலேயே 3 சிக்ஸர்களுடன் இலக்கை அடித்து முடித்து வெற்றி இலக்கை அடைய வைத்திருந்தார் மேத்யூ வேட். இதே ஓவரில், வேட்டின் கேட்ச் ஒன்றும் மிஸ் ஆகி இருந்தது. இது விக்கெட் ஆக மாறி இருந்தால் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பு கிடைத்திருக்கும். இதனைத் தொடர்ந்து, இறுதி போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி சமீபத்திய உலக கோப்பை தொடரின் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் ஏராளமான மனம் நொறுங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதால் இந்த முறையும் இது போன்ற தருணங்கள் உருவாகலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | உலகின் மிகப்பெரிய மரகத கல்.. சுரங்கத்துல இந்தியருக்கு அடிச்ச ஜாக்பாட்.. கின்னஸ் அதிகாரிகளே அசந்து போய்ட்டாங்க..!

CRICKET, WORLD CUP, FANS REWIND, WORLD CUP EVENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்