"அடுத்த 'மேட்ச்' கண்டிப்பா இவரு வேணும்".. 'இளம்' வீரருக்கு வேண்டி, 'ரசிகர்கள்' வைத்த 'கோரிக்கை'.. 'சிஎஸ்கே'வில் நடக்கப் போகும் 'ட்விஸ்ட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன், சில தினங்களுக்கு முன் ஆரம்பமான நிலையில், இன்று நடைபெறவுள்ள 4 ஆவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையே நடைபெற்றிருந்த போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக, சென்னை அணியை வீழ்த்தியிருந்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் முடிவில், 188 ரன்கள் எடுத்திருந்தது.

சென்னை அணி சற்று கடினமான இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்ததால், அந்த அணி வெற்றி பெற்று விடும் என கருதினர். ஆனால், சென்னை அணியின் பந்து வீச்சு படு மோசமாக இருந்ததால், டெல்லி அணி எந்தவித நெருக்கடியும் இன்றி, எளிதாக ஆடி வெற்றி கண்டது.


கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறிய சென்னை அணி, இந்த முறை சிறந்த பேட்டிங்குடன் தொடங்கியதையடுத்து, பந்து வீச்சில் மிகவும் சுமாராக செயல்பட்டது, கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

வெளிநாட்டு பவுலர்களான லுங்கி நிகிடி, பெஹரன்டார்ஃப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டியில் இவர்கள் இருவரும் களமிறங்கவில்லை. தொடர்ந்து, இந்திய பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர், சாஹர் ஆகியோரின் பந்துகளை, டெல்லி அணி அடித்து நொறுக்கியது.

இதனால், சென்னை அணி அடுத்த போட்டிக்கு முன்னதாக, பந்து வீச்சாளர்களில் மாற்றம் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், ஆந்திராவைச் சேர்ந்த ஹரிஷங்கர் ரெட்டி என்ற இளம் வேகப்பந்து வீச்சாளரை சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்த நிலையில், பயிற்சியின் போதும், யார்க்கர் தொடங்கி பவுன்சர் பந்துகள் வரை சிறப்பாக வீசி அசத்தியிருந்தார்.

இதனால், அடுத்த போட்டியில், சென்னை அணி அவரை களமிறக்கினால், அணியின் பந்து வீச்சு நிச்சயம் பலமாகும் என்றும், இவரை தோனி களமிறக்கிப் பார்க்க, அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


மேலும், சிஎஸ்கே ரசிகர்கள், ட்விட்டரிலும் ஹரி ஷங்கரை அணியில் இணைப்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 













 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்