VIDEO: என்னங்க சொல்றீங்க..! இது அவுட் கிடையாதா..? செம கடுப்பான கோலி.. சர்ச்சையில் முடிந்த அம்பயரின் முடிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜடேஜா பிடித்த கேட்சுக்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 74 ரன்களும், கே.எல்.ராகுல் 69 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணிக்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் போட்டியின் 19-வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட கரீம் ஜனத், சிக்சர் விளாச முயன்றார். ஆனால் பந்து எட்ஜாகி கேட்சானது. உடனே வேகமாக ஓடி வந்த ஜடேஜா டைவ் அடித்து அந்த கேட்சை பிடித்தார்.

ஆனால் ஜடேஜா கேட்ச் பிடித்தபோது பந்து தரையில் பட்டதுபோல் இருந்ததால், மூன்றாம் அம்பயரிடம் கள அம்பயர் ரிவியூ கேட்டார். இதனை அடுத்து இந்த கேட்சை பார்த்த மூன்றாம் அம்பயர், அதற்கு நாட் அவுட் கொடுத்துவிட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் கடும் கோபமடைந்தனர். இந்த நிலையில், மூன்றாம் அம்பயரின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

VIRATKOHLI, RAVINDRA JADEJA, INDVAFG, UMPIRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்