ஆல் தி பெஸ்ட் அண்ணா..! வாழ்த்து மழையில் ஹனுமா விஹாரி.. கோலியால் அடித்த அதிர்ஷ்டம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ம் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி காயத்தால் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (03.01.2022) ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி காயம் காரணமாக விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக துணை கேப்டன் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விராட் கோலிக்கு பதிலாக இளம் வீரர் ஹனுமா விஹாரி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹனுமா விஹாரி 624 ரன்களை குவித்துள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். அப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த சூழலில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் ‘ஆல் தி பெஸ்ட் அண்ணா’ என்று சமூக வலைதளங்களில் ஹனுமா விஹாரிவுக்கு  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்துள்ளது. அதில் மயங்க் அகர்வால் 26 ரன்களிலும், புஜாரா 3 ரன்னிலும், ரஹானே டக் அவுட்டாகியும் வெளியேறியுள்ளனர். தற்போது கேப்டன் கே.எல்.ராகுலும், ஹனுமா விஹாரியும் களத்தில் உள்ளனர். இதுபோன்ற இக்கட்டான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹனுமா விஹாரி தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIRATKOHLI, HANUMAVIHARI, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்