"கோலி 71-வது சதம் அடிச்ச அப்பறம் தான்".. கிரவுண்டில் சபதம் எடுத்த வெறித்தனமான ரசிகர்..வைரலாகும் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் ஏன் உலக கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்கள் பட்டியலில் நிச்சயம் விராட் கோலியின் பெயரும் இருக்கும். ஒரு காலத்தில் யாராலும் நெருங்க முடியாதவை என கருதப்பட்ட பல ரெக்கார்டுகளை தன் பேட்டால் 'பிரேக்' செய்தவர் விராட் கோலி. இருப்பினும் யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல கோலிக்கும் சமீப காலமாக சதம் சறுக்கி வருகிறது.

"கோலி 71-வது சதம் அடிச்ச அப்பறம் தான்".. கிரவுண்டில் சபதம் எடுத்த வெறித்தனமான ரசிகர்..வைரலாகும் புகைப்படம்..!
Advertising
>
Advertising

சர்வதேச போட்டிகளில் இதுவரை 70 சதங்களை விளாசியுள்ள விராட், 71 சதத்தினை எப்போது அடிப்பார் என ஏங்கிக் கிடக்கிறார்கள் அவரது ரசிகர்கள். தற்போது நடைபெற்றுவரும் இலங்கை அணி உடனான டெஸ்ட் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என கோலியை நம்பினார்கள் ரசிகர்கள்.

கடைசி சதம்

விராட் கோலி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் வங்க தேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் கடைசியாக சதம் அடித்தார். அதன்பிறகு சர்வதேச போட்டிகளில் அவர் சதம் அடிக்கவில்லை. இதுகுறித்து அவ்வப்போது அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்து வந்தனர்.

இன்று நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கோலியின் 100 வது  டெஸ்ட்டாகும். இதில், கோலி தனது 71 வது சதத்தை விளாசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார் கோலி. இந்நிலையில், இந்த போட்டியில் ரசிகர் ஒருவர் வைத்து இருந்த நோட்டீஸ் இப்போது நெட்டிசன்களால் வைரலாக பரவிவருகிறது.

சபதம்

மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர்," விராட் கோலி 71-வது சதம் அடிக்கும் வரையில் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை" என எழுதிய போர்டை கையில் வைத்து இருந்தார்.

இது தற்போது நெட்டிசன்களால் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. பெங்களூருவில் அடுத்து பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது விராட் கோலி சதமடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

CRICKET, CRICKET, VIRATKOHLI, CENTURY, விராட்கோலி, கிரிக்கெட், சதம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்