VIDEO: ‘பாய் தைரியமா கேளுங்க’!.. ரொம்ப கான்ஃபிடண்டா சொன்ன சிராஜ்.. 4-வது ஓவரில் நடந்த சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ரிவியூ கேட்ட விதத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்த, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லர் 8 ரன்னிலும், மனன் வோஹ்ரா 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இதனை அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர். அப்போது பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய 4-வது ஓவரின் 3-வது பந்தை டேவிட் மில்லர் எதிர்கொண்டார். ஆனால் பந்து அவரது கால் பேடில் பட்டுச் சென்றது. அதனால் அம்பயரிடம் முகமது சிராஜ் எல்பிடபுள்யூ கேட்டார். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து உடனடியாக கேப்டன் விராட் கோலியை ரிவியூ கேட்டச் சொல்லி சிராஜ் வலியுறுத்தினார். ஆனால், பந்து முதலில் காலில்தான் பட்டதா என சிராஜிடம் கேட்டு உறுதி செய்துகொண்ட கோலி, ரிவியூ கேட்பதற்கு 3 செகண்ட் இருந்தபோது சட்டென கையை தூக்கினார். இதனை அடுத்து மூன்றாவது அம்பயர் இதை பரிசோதித்துப் பார்த்த பின் எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார்.

இதனால் டேவிட் மில்லர் டக் அவுட்டாகி வெளியேறினார். சரியாக ஆலோசனை செய்து ரிவியூ கேட்டதால், ராஜஸ்தான் அணியின் முக்கியமான விக்கெட்டை பெங்களூரு அணி எடுத்தது. இதற்கு முன் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் கோலி கேட்ட ரிவியூக்களில் பல தவறான முடிவுகள் வந்துள்ளன. ஆனால் தற்போது ரிவியூ கேட்பதில் கோலி பக்குவம் அடைந்துள்ளதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 20 ஓவர்களில் 177 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிவம் தூபே 46 ரன்களும், ராகுல் திவேட்டியா 40 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராட் கோலி 72 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்