"எவ்ளோ நேர்மையா இருக்காரு!!.." நடுவரிடம் 'Dhoni' காட்டிய சைகை.. விஷயம் தெரிஞ்சதும் கொண்டாடிய ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

Advertising
>
Advertising

அட்ரா சக்க! சும்மா ஸ்பைடர் மேன் மாதிரி பறந்து ரன் அவுட் பண்ணிய தோனி.. அவரோட விக்கெட் இவ்ளோ முக்கியமா..? அப்படி யாருப்பா அந்த ப்ளேயர்..?

நேற்று (04.04.2022) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மோதி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.

அதிரடி காட்டிய ஷிவம் துபே

அதிகபட்சமாக, லிவிங்ஸ்டன் 60 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 36 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சென்னை அணியை பொறுத்தவரையில், ஷிவம் துபே மட்டும் அதிரடியாக ஆடி, 57 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.

சிஎஸ்கே மீது எழும் விமர்சனம்

இதனால், 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி, 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து, பஞ்சாப் அணியும் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முன்னேற்றம் கண்டது. கடந்த முறை, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்திய சிஎஸ்கே, இந்த முறை தொடர் தோல்விகளால் தடுமாறி வருவது, ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை உண்டு பண்ணியுள்ளது.

தோனியை பாராட்டும் ரசிகர்கள்

இனிவரும் போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்றால் தான், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலையும் உருவாகி உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, தோனி செய்த செயல் ஒன்று, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

சந்தேகத்தில் இருந்த MSD

பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 8 ஆவது பெட்ரோரியஸ் வீசினார். பந்தை எதிர்கொண்ட லிவிங்ஸ்டனின் பேட்டில் பட்டு, கீப்பர் நின்ற தோனியின் கைக்கு பந்து சென்றது. ஆனால், பந்து கீழே பட்டது போன்று தோனிக்கு தோன்றியதால், விக்கெட்டிற்கு வேண்டி அப்பீல் செய்யாமல், கீழே பட்டிருக்கலாம் என கருதி, மூன்றாம் நடுவரிடம் பரிசீலனை செய்யும் படி, கள நடுவரிடம் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பரிசோதித்து பார்த்த போது, பந்து கீழே பட்டது உறுதியானது. எதிராணியாக இருந்தாலும், தன்னுடைய கேட்ச்சில் சந்தேகம் இருந்ததால் அதனை உடனடியாக பரிசீலிக்க, தோனி நடுவரிடம் கேட்டுக் கொண்ட சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் தோனியின் நேர்மையான குணத்தினை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

தோனி மீது புகார்களை அடுக்கிய முன்னாள் வீரர்கள்.. சூசகமாக பதில் சொன்ன ஜடேஜா??..

CRICKET, IPL, IPL 2022, MS DHONI, UMPIRE, DOUBTFUL CATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்