Video : "ஓஹோ,,.. இதுக்காக தான் அங்க 'wait' பண்ணிட்டு இருக்கீங்களா??..." மைதானத்திற்கு வெளியே காத்திருந்த மக்கள்,,.. வைரல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, 13 ஆவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி மைதானங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெற்று வரும் நிலையில், ஷார்ஜா மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான ஒன்றாகும்.

மிகவும் சிறிய மைதானமான ஷார்ஜாவில் மிக எளிதாக பவுண்டரிகளை வீரர்கள் அடித்து விடலாம். இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பல அணிகள் 200 க்கும் அதிகமாக ரன்களை குவித்துள்ளது. அது மட்டுமில்லாமல், பேட்ஸ்மேன் இந்த மைதானத்தில் அடிக்கும் சிக்ஸர்கள் மைதானத்திற்கு வெளியேயுள்ள சாலைகளில் சென்று விழும்.

அந்த பந்துகளை சாலையில் செல்லும் கிரிக்கெட் ரசிகர்கள் எடுத்துச் செல்வது வழக்கம். அது தொடர்பான வீடியோக்களும் அதிகம் வைரலாகி வந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது புதிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஷார்ஜா மைதானத்திற்கு வெளியே சில கிரிக்கெட் ரசிகர்கள், மைதானத்தில் இருந்து அடிக்கப்படும் பந்துகளை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர். இந்த வீடியோவை எடுத்து பகிர்ந்த நபர், 'ஷார்ஜா மைதானத்திற்கு வெளியே மக்கள் பந்துகளை எதிர்பார்த்து நிற்கின்றனர்' என குறிப்பிட்டுள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்