‘அதிர்ஷ்டமே இல்ல’.. பாவங்க மனுசன் நல்லா விளையாடியும் டீம்ல இடம் கிடைக்கல.. கொதித்த நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஹனுமா விஹாரி பிளேயிங் லெவனில் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. அதனால் இன்று (11.01.2022) கேப் டவுன் மைதானத்தில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் கே எல் ராகுல் 12 ரன்களிலும், மயங்க் அகர்வால் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். தற்போது கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் இப்போட்டியில் இளம் வீரர் ஹனுமா விஹாரி இடம்பெறவில்லை. ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 20 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 40 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திறமையான ஒரு வீரர் அதிர்ஷ்டம் இல்லாமல் தொடர்ந்து வெளியே உட்கார வைக்கப்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

INDVSSA, HANUMAVIHARI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்