‘ஒரு காலத்துல எப்படி இருந்த டீம்’!.. KKR-ஐ காப்பாத்தணும்னா உடனே ‘அதை’ பண்ணுங்க.. செம கடுப்பில் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணி நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் 10 ஓவர்களில் 75 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி பரிதாப நிலையில் இருந்தது.

அப்போது களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் 27 பந்துகளில் 45 ரன்கள் (4  சிக்சர்கள், 2 பவுண்டரிகள்) அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் இயான் மோர்கன், ஆல்ரவுண்டர் சுனில் நரேன் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியின் தொடர் தோல்வியை குறிப்பிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில், படத்தில் போர் அடிக்கும் காட்சியை ஓட்டிவிடுவதுபோல் கொல்கத்தா அணியின் பேட்டிங் இருப்பதாகவும், செய்த தவறையே அந்த திரும்ப திரும்ப செய்வதாகவும் சேவாக் தெரிவித்திருந்தார். மேலும் கொல்கத்தா அணி நிர்வாகத்தையும் கடுமையாக சாடி இருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் நிதிஷ் ரானா ஆகியோர் பெவிலியலின் சிரித்துக் கொண்டிருந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது உள்ள வீரர்களுக்கு முன்பு இருந்த வீரர்கள்போல் வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் இல்லை என்றும், கவுதம் கம்பீர் இருந்த காலத்தில் இருந்த கொல்கத்தா அணி தற்போது இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2012 மற்றும் 2014-ம் ஆண்டு கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின்னர் ஒருமுறை கூட கொல்கத்தா அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இது அந்த அணி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கொல்கத்தா அணியைக் காப்பற்ற வேண்டுமென்றால், அணி நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என ‘#SackManagementSaveKKR’ என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்