ரோகித் சர்மா போட்டோவுடன் டுவிட்டரில் போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. மறுபடியும் மறைமுகமாக கோலியை சீண்டுகிறதா பிசிசிஐ..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிசிசிஐ டுவிட்டரில் பதிவிட்ட ஒரு பதிவு விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன், இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இந்த சூழலில் இந்திய அணி வரும் 26-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதனிடையே திடீரென ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது விராட் கோலியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி  விலக சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் விராட் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் ரோகித் சர்மா தனது உடற்தகுதியை நிரூபிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பயிற்சியை மேற்கொண்டிருந்த U19 அணி வீரர்களுக்கு ரோகித் சர்மா ஆலோசனை வழங்கினார்.

இந்த புகைப்படத்தை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘விலைமதிப்பற்ற பாடங்களை ரோகித் சர்மா எடுத்து வருகிறார். தனது பெரும்பாலான நேரங்களை இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி வீரர்களை தயார் செய்ய நேரத்தை செலவிட்டார்’ என குறிப்பிட்டுள்ளது.

ஆனால் விராட் கோலி, கிரிக்கெட் போட்டிகள் இல்லாத சமயங்களில் தனியாகவே இருப்பார். பெரும்பாலும் சக வீரர்களுடன் கலந்து ஆலோசிப்பதை பார்க்க முடியாது. கிரிக்கெட் போட்டிகள் இல்லாத சமயங்களில் விராட் கோலியை அணுகுவது சற்று கடினம் என இளம் வீரர்கள் சிலர் கூறியுள்ளனர். இதனை மறைமுகமாக பிசிசிஐ சாடியுள்ளதாக விராட் கோலியின் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்