சொன்ன மாதிரியே ‘கோலி’-யை அவுட்டாக்கிய வீரர்.. ‘அதுக்காக இப்படியா பண்றது’.. இன்ஸ்டாகிராமில் சரமாரியாக திட்டும் இந்திய ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலியை அவுட்டாக்கியதற்காக நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரை இந்திய ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

ஆனால் அடுத்து களமிறங்கிய புஜாரா 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடியும் வரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் விராட் கோலி 44 ரன்களும், ரஹானே 29 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதனால் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெயில் ஜேமிசன் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து ரஹானே 49 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்த வந்த ரிஷப் பந்த் 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக 217 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை கெயில் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முன்னதாக நியூஸிலாந்து வீரர் டிம் சவுத்தி பேட்டி ஒன்றில் கூறுகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கெயில் ஜேமிசன் நிச்சயம் எடுப்பார் என கூறியிருந்தார். அவர் கூறியது போலவே கோலியின் விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் கோலியை அவுட்டாக்கியதற்காக கெயில் ஜேமிசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கெயில் ஜேமிசன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்