"அழகா இருக்காங்களே?"..பிரபல டென்னிஸ் வீரரின் மனைவியை புகழ்ந்த ட்விட்டர்வாசி.. அதற்கு அவர் கொடுத்த Reply!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தன்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தார்.

                       Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா இணை, பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது. சானியாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி இது என்பதால் அவர் வெற்றிபெற வேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் இந்த போட்டியில் சானியா மற்றும் போபண்ணா இணை தோல்வி அடைந்திருந்தது. தன்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா கண்ணீருடன் ரசிகர்களுக்கு விடைகொடுத்தார். மேலும் போட்டி முடிவடைந்த பிறகு, உருக்கமான சில கருத்துக்களையும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, சானியா முதல் கலப்பு இரட்டையர் போட்டியில் ஆடிய போது அவருடன் போபண்ணா இணைந்து ஆடி இருந்தார். அதே போல, அவரது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் ரோஹன் போபண்ணா தான் சானியா மிர்சா பார்ட்னராக ஆடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners

முன்னதாக, இந்த போட்டியில், ரோகன் போபண்ணாவின் மனைவி சுப்ரியா மைதானத்தில் வருகை தந்திருந்தார். தனது கணவர் போபண்ணா மற்றும் சானியா மிர்சா ஆகிய இருவருக்கும் ஆதரவை அளிப்பதற்காக சுப்ரியா வந்திருந்தார். மேலும் சுப்ரியா போட்டியை கண்டுகளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.


Images are subject to © copyright to their respective owners

அப்போது, ட்விட்டர்வாசி ஒருவர், சுப்ரியாவின் புகைப்படத்தை பகிர்ந்து "இவர் போபண்ணாவின் மனைவியா?. நான் பார்த்ததில் மிக அழகான பெண் இவர் தானா?" என வியப்புடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவை கவனித்த டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, தனது மனைவி அழகான பெண் தான் என குறிப்பிடும் வகையில், "நான் ஒப்புக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. சானியா மிர்சாவுடன் ஆடிய இறுதி போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் போபண்ணாவுக்கு இது 2 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ROHAN BOPANNA, SANIA MIRZA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்