VIDEO: ‘இது ஒன்னும் ஐபிஎல் இல்ல.. நீங்க உலகத்திலேயே பெரிய கிரிக்கெட் வாரியமாக இருக்கலாம், ஆனா..!’ பிசிசிஐக்கு எதிராக கொந்தளித்த ரசிகர்.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், ரசிகர் ஒருவர் பிசிசிஐயை கடுமையாக சாடியுள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட கையைவிட்டுச் சென்றுவிட்டது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர் பிசிசிஐயை கடுமையாக சாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ‘இன்றைக்கு நடந்ததை வைத்து பாடம் கற்றுக்கொண்டிருப்பீர்கள். இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ இருக்கலாம். ஆனால் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பது கொஞ்சமாவது மனதில் இருக்கிறதா?’ என ரசிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

BCCI, IPL, T20WORLDCUP, TEAMINDIA, FANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்