ரசிகர் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ.."ஐ ஆம் Impressed ரா கண்ணா".. மெய் சிலிர்த்து போன தினேஷ் கார்த்திக்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று நடைபெற்றிருந்த நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது .

Advertising
>
Advertising

Also Read | 43 சவரன் நகைகளை குப்பையில் வீசிய பெண்.. அதிர வைத்த சிசிடிவி காட்சி.. அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்

இதனால், டெஸ்ட் தொடர் 2 - 2 என்ற சமனில் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரும் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்பாக, கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி, இரண்டு டி 20 பயிற்சி ஆட்டங்களிலும் மோதி இருந்தது.

பயிற்சி ஆட்டத்தில் வெற்றி

டெர்பிஷயர் மற்றும் நார்தம்ப்டன்ஷயர் ஆகிய இரு அணிகளுக்கும் எதிராக பயிற்சி ஆட்டத்தில் மோதி இருந்த இந்திய அணி, இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தது. அதே போல, தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது. 37 வயதாகும் தினேஷ் கார்த்திக், முதல் முறையாக இந்திய அணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு, பயிற்சி ஆட்டங்கள் மூலமாவது கிடைத்துள்ளது. அதே வேளையில், இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார் தினேஷ் கார்த்திக்.

திறனை நிரூபித்த தினேஷ் கார்த்திக்

சில போட்டிகளில், வர்ணனையாளராகவும் தினேஷ் கார்த்திக் ஈடுபட்டு வந்ததால், அவர் இனிமேல் இந்திய அணிக்காக ஆட மாட்டார் என்றும் சிலர் கருதினர். ஆனால், தனது விடா முயற்சியால், வேற லெவலில் தயாரான தினேஷ் கார்த்திக், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது திறனை வெளிப்படுத்தி, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கவும் செய்துள்ளார்.

ரசிகர் வெளியிட்ட 'Tribute' வீடியோ

இந்தாண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும், நிச்சயம் தினேஷ் கார்த்திக் இடம் பிடிப்பார் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர் தினேஷ் கார்த்திக் பயிற்சி ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட்டது தொடர்பாக வாழ்த்துக்களைக் கூறும் வகையில், அசத்தலான Tribute வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Mosaic கலைஞரான பிரித்வேஷ் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், 600 Rubik's Cube-களை கொண்டு, தினேஷ் கார்த்திக்கின் முகம் தெரியும் வகையிலான Mosaic ஆர்ட் வொர்க் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் வைரலான நிலையில், இதனை கவனித்த தினேஷ் கார்த்திக், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மிகவும் சிறந்த வேலை ப்ரித்வி. நான் அதிகம் Impress ஆனேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 

Also Read | பைபாஸ் சாலை.. நள்ளிரவு நேரம்.. தனியாக நின்று லிஃப்ட் கேட்ட பெண்.. காரை நிறுத்தியதும் அரண்டு போன ஓட்டுநர்

 

CRICKET, DINESH KARTHIK, RUBIK CUBES, FANS, தினேஷ் கார்த்திக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்