VIDEO: ‘மஹி...மஹி..!’ பும்ராவுடன் நடந்துபோன தோனி.. திடீரென ‘பெண்’ ரசிகை வச்ச வேண்டுகோள்.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பயிற்சி முடிந்து இந்திய வீரர்களுடன் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்த தோனியிடன் ரசிகை ஒருவர் வைத்த வேண்டுகோள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘மஹி...மஹி..!’ பும்ராவுடன் நடந்துபோன தோனி.. திடீரென ‘பெண்’ ரசிகை வச்ச வேண்டுகோள்.. ‘செம’ வைரல்..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு (IND vs PAK) இடையேயான போட்டி இன்று (24.10.2021) நடைபெற உள்ளது. துபாய் (Dubai) மைதானத்தில் இரவு 7:30 மணியளில் போட்டி தொடங்குகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதவுள்ளதால், இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Fan girl asks Dhoni to lose, KL Rahul to not perform goes viral

உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 5 முறை இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. ஆனால் அதில் ஒன்றில் கூட பாகிஸ்தான் வென்றது கிடையாது. அதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி முனைப்பு காட்டி வருகிறது.

Fan girl asks Dhoni to lose, KL Rahul to not perform goes viral

இதனிடையே இந்திய வீரர்கள் துபாய் மைதானத்தில் நேற்று பயிற்சியை முடித்துவிட்டு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெண் ரசிகை ஒருவர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலை (KL Rahul) பார்த்து, ‘ப்ளீஸ் ராகுல், இன்றைக்கு மட்டும் நன்றாக விளையாடாதீர்கள்’ என குறும்பாக கூறினார்.

அப்போது ராகுலுக்கு பின்னால் தோனியும் (Dhoni), பும்ராவும் (Bumrah) நடந்து வந்துகொண்டு இருந்தனர். உடனே, ‘மஹி இந்த போட்டி மட்டும் வேண்டாம், அடுத்த போட்டியை பார்த்துக் கொள்ளுங்கள்’ என அந்த பெண் ரசிகை கூறினார். ஆனால் தோனி ஏதும் கூறாமல் சிரித்துக்கொண்டே சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இவர் தலைமையிலான இந்திய அணி பல வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை தோனி வென்று கொடுத்துள்ளார். ஐசிசி நடந்தும் இந்த 3 தொடரிலும் கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் தோனி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின் விராட் கோலி (Virat Kohli) இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தி வருகிறார். இவர் தலைமையிலான இந்திய அணி பல முக்கிய போட்டிகளில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனாலும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட விராட் கோலி வென்று கொடுக்கவில்லை. இதுதான் அவர் மீது விமர்சனமாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடருடன், டி20 இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார்.

அதனால் நடப்பு டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக (Mentor) தோனியை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் விளையாடுவதால், தோனி போன்ற அனுபவமிக்க வீரர் ஆலோசகராக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்