‘அடப்பாவமே பாகிஸ்தானுக்கு இப்டியொரு சோதனையா’.. ‘கடைசியில இப்டி இறங்கிட்டாங்களே’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் அணியை தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடர்ந்து 7 முறை உலகக்கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் சமூகவலைதளங்களில் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், அக்தர் உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக சாடினர். அதில், பாகிஸ்தான் கேப்டனுக்கு எதிராக சில கருத்துக்களையும் தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில்,  ‘பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இந்திய வீரர்களின் உடல் தகுதிக்கு இணையாக இல்லை. மேலும் இந்திய அணியை வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்துடன் விளையாடினர். ஆனால் இந்திய அணி இது ஏதும் இல்லாமல் எளிமையாக விளையாடி வெற்றி பெற்றது’ என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்த விரக்தியில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அணியை தடை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து விளக்கமளிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ICCWORLDCUP2019, PCB, FAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்