"உண்மையிலயே அவருக்கு என்னதான் ஆச்சு???"... 'Practiceல இருக்காரு ஆனா, எந்த Teamலயும் இல்ல?!!'... 'பிரபல வீரர் சரமாரி கேள்வி!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோஹித் சர்மா காயம் குறித்து வெளிப்படையாக கூறவேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், கடந்த இரு போட்டிகளிலும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பில் பொல்லார்ட் செயல்பட்டுவருகிறார். ஆனால் இதுவரை ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து  தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் நேற்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்தியாவின் மூன்று அணிகளிலும் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், "வலைப்பயிற்சியின்போது ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். அது என்ன காயம் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் கடந்த போட்டிக்குமுன் வலைப்பயிற்சி செய்தார். அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இருந்தால் கண்டிப்பாக அவரால் பயிற்சியில் ஈடுபட்டிருக்க முடியாது. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.

எனவே இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். ரோஹித் சர்மாவுக்கு என்ன காயம் என்பதை ரசிகர்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். ஐபிஎல் போட்டியில் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் காயம் குறித்து வெளிப்படையாக கூறாமல் இருக்கலாம். எதிரணிக்கு அது சாதகமாக அமைந்துவிடக் கூடாது என நினைத்து அவர்கள் அப்படி செய்வது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை அப்படி இருக்க முடியாது. ரோஹித் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவர்களுடைய கடமை" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்