அடுத்த ஐபிஎல் ஏலத்துல தோனியை ‘சிஎஸ்கே’ தக்க வைக்கலைனா என்ன பண்ணுவார்..? கேள்வி எழுப்பிய ரசிகர்.. முன்னாள் வீரர் சொன்ன ‘மிரட்டல்’ பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக்கிடம் தோனி குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அவர் சூப்பர் பதிலளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது அதுதான் முதல்முறை. இதனால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்தும் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதனால் சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியின் போது, இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘நிச்சயமாக இல்லை’ என தோனி பதிலளித்தார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதனை அடுத்து சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்கிடம் (Brad Hogg) ரசிகர் ஒருவர் தோனி குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், ‘வரும் ஐபிஎல் 2022 சீசனில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கவில்லை என்றால், அவர் அடுத்தது என்ன செய்வார்? எந்த அணிக்கு அவரது கிரிக்கெட் அனுபவம் முக்கியமாக தேவைப்படும்?’ என ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த பிராட் ஹாக், ‘ஐபிஎல் களத்தில் சென்னை அணியின் மகாராஜா மகேந்திர சிங் தோனி. அதனால் அவர் சிஎஸ்கே அணியை விட்டு விலக வாய்ப்பு இல்லை. வீரராக களம் இறங்காமல் போனாலும், பயிற்சியாளராக அவர் அவதாரம் எடுக்கலாம்’ என பதிலளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்