"டிசம்பர் 18 மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்".. 7 வருடம் முன்பே கணித்த ரசிகர்..?? FIFA2022

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.

Advertising
>
Advertising

Also Read | உலகக்கோப்பை கால்பந்து Final.. கத்தாரில் இந்திய திரை பிரபலங்கள்.. யார் யார் இருக்காங்க பாருங்க..!

இதன் இறுதி போட்டியில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதி இருந்தது. அர்ஜென்டினா அணியில் ஆடி வரும்  நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையில் இந்த முறை அந்த அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் எதிர்பார்த்தும் வந்தனர்.

மேலும், உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி நடந்தது.

முதல் பாதியில், அர்ஜென்டினா அணி இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை வகிக்க, இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே அடுத்தடுத்த நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்ததால், அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆடி போயினர். இதன் பின்னர், கூடுதல் நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, போட்டி முடிய ஒரு சில நிமிடம் இருக்கும் போது, எம்பாப்பே பெனால்ட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால், கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் சேர்த்து 3 - 3 என்ற கணக்கில் இருந்ததால், பின்னர் பெனால்டி சுற்றுக்கு போனது.

பெனால்டி ஷூட்அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருக்கிறது அர்ஜென்டினா. இதனால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். அது மட்டுமில்லாமல், இந்த உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியின் வெற்றிக்காக பெரிய பங்காற்றி இருந்த மெஸ்ஸியையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில், தற்போது நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர் ஒரு செய்த ட்வீட், தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடரின் அட்டவணை வெளியாகி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ரசிகர் ஒருவர் செய்த ட்வீட் ஒன்று தான் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த ரசிகர் பகிர்ந்த ட்வீட்டில், "2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி, 34 வயதான மெஸ்ஸி உலக கோப்பையை வென்று தான் ஒரு தலைசிறந்த வீரர் என்பதை நிரூபிப்பார். 7 ஆண்டுகள் கழித்து என்னை திரும்பி பாருங்கள்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ரசிகர் 7 ஆண்டுகளுக்கு முன்பு ட்வீட் செய்ததை போலவே, அர்ஜென்டினா அணி டிசம்பர் 18 ஆம் தேதி கோப்பையை கைப்பற்றியதுடன் மெஸ்ஸியும் தலைசிறந்த வீரர் என்பதை இந்த தொடரில் நிரூபித்துள்ளார். கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டியின் தேதி முன்னரே உறுதியானாலும் அர்ஜென்டினா அணி மற்றும் மெஸ்ஸி குறித்து ரசிகர் 7 ஆண்டுகளுக்கு முன்பு பகிர்ந்த ட்வீட் தான், இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது.

அதே வேளையில், இது எடிட் செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற சில கேள்விகளையும் இணையவாசிகள் முன் வைக்காமல் இல்லை.

 

Also Read | 3-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது அர்ஜென்டினா.. உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! FIFA2022

ARGENTINA WINNING WORLD CUP, FANS, FIFAWC2022, MESSI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்