‘என்ன இவர்கள் எல்லாம் உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறப்போகிறார்களா’?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு ஓய்வு பெற இருப்பதாக மூத்த வீரர்கள் சிலர் தங்களது முடிவை அறிவித்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடர் நாளை (30/05/2019) தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், மூத்த வீரர்கள் சிலர் தங்களது ஓய்வு முடிவு குறித்து அறிவித்துள்ளனர்.

இதில், மேற்கு இந்திய தீவுகள் அணியின் மூத்த வீரரும் அதிரடி மன்னனுமான கிறிஸ் கெயில் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்நிலையில், 5 உலகக்கோப்பையில் விளையாடிய அனுபவம் மற்றும் பல சாதனைகளுடன் கிரிக்கெட் உலகின் சிக்ஸர் மன்னனான கெயில் ஓய்வு பெறவிருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரரும், ஐபிஎல் தொடரில் பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டவருமான சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரும் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறவிருக்கிறார். 40 வயதான இம்ரான் இந்த உலகக்கோப்பையின்போது தனது 100 வது போட்டியில் விளையாடவுள்ளார்.

இதேபோல மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான ஜே.பி.டுமினியும் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 2015 ல் நடந்த கிரிக்கெட் தொடரில், 5 வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பில் உலக சாதனை செய்த டுமினி, பந்துவீச்சிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, பல சாதனைகளோடு டுமினி ஓய்வு பெறவிருக்கிறார்.

இதையடுத்து, இந்த 3 வீரர்களும் உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறவிருக்கின்றனர். இதேபோல இன்னும் எந்த வீரர்கள் எல்லாம் உலகக்கோப்பை தொடரோடு தங்களது ஓய்வு முடிவை அறிவிக்க காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ICCWORLDCUP2019, RETIREMENT, CHRIS GAYLE, IMRAN TAHIR, DUMINI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்