VIDEO: ப்பா... என்ன ஒரு டைமிங்...! 'கொஞ்சம் மிஸ் ஆயிருந்தாலும் அவ்ளோ தான்...' கேட்ச் பிடிச்சிட்டு 'என்ன' பண்றார் பாருங்க...! இதெல்லாம் 'அவரால' மட்டும் தான் முடியும்...! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நேற்று (26-09-2021) நடைபெற்ற போட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றன.
2021-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் டி-20 தொடர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களத்தில் மோதி கொண்டனர்.
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணி கடந்த சில ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் கொல்கத்தா அணி தன்னுடைய முழு வீச்சுடன் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் சென்னையை கதிகலங்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்த நிலையில் அடுத்த ஐந்தாவது பந்திலேயே அவசரப்பட்டு தேவையில்லாமல் ரன் அவுட்டானார்.
அதுமட்டுமில்லாமல் தற்போதைய கொல்கத்தா அணியின் சிம்ம சொப்பனமாக திகழும் வெங்கடேஷ் ஐயர் மின்னல் வேகத்தில் ஆடுவார் என நினைத்த ரசிகர்களுக்கு வெறும் 18 ரன்களிலேயே அவுட் ஆனார்.
அதோடு, கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் 8 ரன்னிலும், ராகுல் திரிபாட்டி 45 ரன்களிலும்ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 171 ரன்களில் ஆட்டத்தை முடித்தது.
கொல்கத்தா அணி விக்கெட்களை இழந்தாலும், அவர்களின் நிதானமான ஆட்டமுறையில் 171 ரன்களை எடுத்தது.
பின்னர் 172 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியில் துவக்க ஜோடிகளான டுப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சென்னை அணி 74 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 40 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மொயீன் அலி அதிரடியாக ஆடினார். இந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த டுப்ளசிஸ் 30 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ராயுடு 10 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் மொயீன் அலியுடன் சேர்ந்த ரெய்னா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் மொயீன் அலி அவுட் ஆக, சென்னை அணி சரியத் தொடங்கியது. அதுவரை சென்னை எளிதாக வெற்றி பெறும் என்றிருந்த நிலை மெதுவாக மாறத் தொடங்கியது. ரெய்னாவுடன் சேர்ந்து கேப்டன் தோனி அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 சிக்ஸ் மற்றும் 2 ஃபோர் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் ஜடேஜா. ஆனால் இங்கே தான் ட்விஸ்ட் ஆரம்பமானது. கடைசி ஓவரில் 4 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், நரைன் பந்து வீசினார். முதல் பந்தை சந்தித்த சாம் கரண் தூக்கி அடிக்க பார்த்து, கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த தாக்கூர், முதல் பந்தை டாட் ஆக்கி ரசிகர்களின் ப்ரஷரை ஏற்றினார். அடுத்த பாலில் பின்னால் தட்டி விட்டு 3 ரன்கள் எடுக்க ஸ்கோர் சமனானது. வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அடுத்த பந்தை சந்தித்த ஜடேஜாவால் ரன் எடுக்க முடியவில்லை. அதைவிட அதிர்ச்சியாக அதற்கடுத்த பந்திலே எல்.பி.டபுள்.யூ ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில், களமிறங்கிய சாஹர், மிட் விக்கெட் திசையில் அடித்து, 1 ரன் அடித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த நிலையில், சென்னை அணி பவுலிங்கில் ஈடுபட்டிருந்தபோது கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் சிக்ஸர் நோக்கி அடித்த பந்தை, பவுண்டரி லைனில் நின்றிருந்த டூ-பிளசிஸிஸ் சாமர்த்தியாக கேட்ச் பிடித்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோலியை அவுட்டாக்க ‘தோனி’ போட்ட மாஸ்டர் ப்ளான்.. ‘மேட்ச்சோட திருப்புமுனையே இதுதான்’.. வெளியான சீக்ரெட்..!
- VIDEO: எல்லாரும் சிக்ஸ் அடிச்சதும் பந்தைதான் பார்ப்பாங்க.. ஆனா கோலி என்ன பண்ணாரு தெரியுமா..? ‘செம’ மாஸ்..!
- VIDEO: பிராவோ கூட என்னங்க சண்டை..? ‘சிரிச்சிக்கிட்டே தோனி சொன்ன பதில்’.. அப்போ ஒவ்வொரு வருசமும் இப்படி நடக்குமா..!
- VIDEO: ‘பேசாம நீங்க சிஎஸ்கேவுக்கே வந்திருங்க கோலி’!.. மேட்ச் தோத்த சோகத்திலும் மனுஷன் செஞ்ச செயல்.. உருகும் ரசிகர்கள்..!
- VIDEO: அம்பயர் எடுத்த முடிவு.. ‘ஷாக்’ ஆன படிக்கல்.. ஆனா ஜடேஜா ‘ஹேப்பி’ அண்ணாச்சி..!
- அந்த ‘ரெண்டு’ பேர்ல ஒருத்தருக்குதான் இடம்.. என்ன முடிவு எடுப்பார் ‘தல’ தோனி..?
- 'இந்த ஐபிஎல்ல அவன் தான் ஸ்டார்'... 'பையன் யுவராஜ் சிங் போல ஆடுறான்'... இளம் வீரர் மீது திரும்பியுள்ள மொத்த கவனம்!
- ‘சிஎஸ்கே ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி’.. ரத்து செய்யப்பட்ட கிரிக்கெட் தொடரால் நடந்த நன்மை..!
- 'அந்த மனுஷன் செம மூளைக்காரர் தான்'... 'இந்த ஐபிஎல்ல தெறிக்க விட போறாரு'... பொடி வைச்சு பேசிய 'சேவாக்'!
- '20 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா செதுக்கி கொண்டு வந்தாங்க'... 'போச்சா, ஒரே அறிவிப்புல எல்லாம் போச்சு'... 'இந்த பாவம் சும்மா விடுமா'?... பொங்கியெழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்!