‘4 மணிநேரம் லேட்’ ‘இந்தியாவுக்கு போகுற ப்ளைட்ட மிஸ் பண்ண போறேன்’.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபல வீரரின் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விமானம் புறப்பட 4 மணிநேரம் தாமதமானதால் இந்தியாவுக்கு செல்ல வேண்டிய மற்றொரு விமானத்தை தவறவிட போகவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டு ப்ளிஸிஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கபட்டது. இதனை அடுத்து மொகாலியில் நடைபெற்ற 2 -வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி  இன்று (22.09.2019) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் 4 மணி நேரம் தாமதமாக வந்த பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தால் இந்தியா வருவதற்கான இணைப்பு விமானத்தை தவறவிட்டதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் டு ப்ளிஸிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ 4 மணிநேர தாமதத்துக்கு பின் துபாய் செல்வதற்கான விமானத்தில் இருக்கிறேன். இப்போது இந்தியா செல்லும் விமானத்தை தவறவிட போகிறேன். அடுத்த விமானம் 10 மணிநேரத்துக்கு பிறகுதான். எனது கிரிக்கெட் பேக்  இன்னும் வந்து சேரவில்லை. எனது விமான பயணங்களிலே இது மோசமான அனுபவம்’ என பதிவிட்டுள்ளார். டு ப்ளிஸிஸ் -ன்  இந்த பதிவுக்கு பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமான நிர்வாகம் ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளது.

INDVSA, CRICKET, BRITISHAIRWAYS, FAFDUPLESSIS, FLIGHT, SLAMS, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்